tamilnadu

img

இந்தியாவிலும் போயிங் 737-மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை!

எத்தியோப்பிய விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து, கடந்த 10-ஆம் தேதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமும் விபத்துக்குள்ளானது. இதில் 157 பேர் பலியாயினர். 


ஒரே மாதிரியாக இரு முறை விபத்துக்குள்ளானதால், விமானத்தின் வேகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளன. இதனை தொடர்ந்து, தற்போது இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. 


இதுகுறித்து, விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


;