tamilnadu

img

மெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

மெக்ஸிகோ சிட்டி 
வட அமெரிக்கக் கண்டத்தில் 12 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா வைரஸ் மையம் கொண்டுள்ள அமெரிக்காவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மெக்ஸிகோ நாடு கொரோனாவை விரட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்தாலும், கடந்த 2 நாட்களாக அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.

இன்று ஒரே நாளில் 1,043 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது (10,544).பலியானவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் கோரோனோ பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  

;