tamilnadu

img

ஊடங்கு தளர்வு எதிரொலி... ஜெர்மனியில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா....

பெர்லின் 
ஐரோப்பா கண்டத்தில் உள்ள வளமிக்க நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. இதனால்  அந்நாட்டு அரசு ஊரடங்கில் கொஞ்சம் சமரசம் செய்தது. இதன் வெளிப்பாடாக அங்கு கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஜெர்மனியில் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 123 பேர் பலியாகியுள்ள நிலையில்,  ஜெர்மனியில் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 20 ஆயிரம் பேர் தான் அங்கு கொரோனா நோயாளிகளாக உள்ளனர். கொரோனாவை வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் மக்கள் சகஜமாக தெருவில் வலம் வருகின்றனர். இதன் காரணமாகவே ஜெர்மனியில் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது.     

;