tamilnadu

img

“ஃபமோடிடின்” மருந்து கொரோனவுக்கு பலனளிக்குமா?

வாஷிங்டன், ஏப்.28-  கொரோனாவுக்கு அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் நெஞ்சுவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பரிசோதனை முறையில் கொடுக்கப்படுகிறது.

பெப்சிட் மருந்தில் சேர்க்கப்படும் ஃபமோ டிடின் என்ற வேதிப்பொருள் கொரோனா சிகிச்சைக்கு விரைவில் தயாராகுமென நார்த்வெல் ஹெல்த் இன் ஃபைன்ஸ்டீன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச் நிறுவ னத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலை வருமான டாக்டர் கெவின் டிரேசி தெரி வித்துள்ளார். 

பெப்சிட் மருந்து பொதுவாக நெஞ்சு எரிச் சலை போக்கக் கூடியது. இதில் சேர்க்கப்பட் டுள்ள ஃபமோடிடி-ன் என்ற வேதிக் கலவை கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் கெவின் டிரேசி கூறு கையில், ஃபமோடிடினை கொரோனா சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டுமென டாக்டர் மைக்கேல் கால்ஹான் என்னிடம் கூறினார். அவர் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று சீன மருத்துவர்களுடன் பணி புரிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஃபமோடிடின் பயனளித்ததாகக் கூறப்படு கிறது. ஆனால் இதன் ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றார்.

தொற்று நோய் மருத்துவப் பேராசிரிய ரும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவு ஒருமைப்பாடு மற்றும் பகுப்பாய்வு களுக்கான மருத்துவத் துணைத் தலைவரு மான டாக்டர் ஸ்டூவர்ட் ரே, ஏபிசி செய்தி நிறு வனத்திடம் கூறுகையில், நார்த்வெல்லில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா உள்ள வர்களுக்கு ஃபமோடிடினைப் பயன்படுத்து கிறார்கள் என்பதைக் கேட்டு ஆச்சரியப்பட் டேன். ஆனால் இதன் பூர்வாங்கத் தரவு குறித்து சந்தேகம் உள்ளது. இது வழக்கமான மறு ஆய்வு செயல்பாட்டில் சரிபார்க்கப்பட வில்லை என்றார்.

ஏபிசி 7- நியூஸ் இணையதள தகவல்களிலிருந்து