tamilnadu

img

குறையும் கொரோனா பாதிப்பு.... ஸ்பெயினில் இயல்பு நிலை திரும்புகிறது... 

மாட்ரிட் 
ஐரோப்பா கண்டத்தின் தென் மேற்கு நாடான ஸ்பெயினில் கொரோனா வைரஸ் குறுகிய காலத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 837 பேர் பலியாகியுள்ள நிலையில், 1 லட்சத்து 96 ஆயிரம் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் ஒருவார காலமாக ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவல் மந்தமாக உள்ளது. கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே ஸ்பெயினில் சராசரியாக ஒருநாளில் 2000-க்கும் அதிகமானோர்  பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு 500-க்குள் உள்ளது. அந்நாட்டு மக்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக நேற்று ஸ்பெயினில் யாரும் கொரோனானால் பாதிக்கப்படவில்லை. 

பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. ஸ்பெயினில் பெரும்பாலும் ஒரு நாளில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகுவார்கள். ஆனால் கடந்த ஒருவார காலமாகச் சராசரியாக 50 பேர் மட்டுமே பலியாகி வருகின்றனர். இதனை உற்றுநோக்கும் பொழுது ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்து வருவது உறுதியாகியுள்ளது. மேலும் மொத்த கொரோனா பாதிப்பில் 1.96 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளதால் இன்னும் 58 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;