tamilnadu

img

ரஷ்யாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒரே நாளில் 2500 பேருக்கு பாதிப்பு 

மாஸ்கோ  
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொடக்கதில் மந்தமாக பரவியது. அதாவது கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் ரஷ்யா கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்காமல் இருந்த நிலையில், தற்போது 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அங்கு இதுவரை 18,328 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் பலியாகியுள்ள நிலையில், 1470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 2500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

;