tamilnadu

img

ரஷ்யாவில்  கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது... 

மாஸ்கோ 
ஐரோப்பா கண்டத்தில் கொரோனாவால் உருக்குலைந்த பெரும்பலான நாடுகள் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா மட்டும் கொரோனாவால் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. 

இந்நாட்டில் தற்போது கணிக்க முடியாத அளவிற்கு கொரோனா பரவல் வேகம் உள்ளது. தினமும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ரஷ்ய மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். 
இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 8 ஆயிரத்து 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 4 லட்சத்து 93 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 219 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 358 ஆக  உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். குறுகிய காலத்தில் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ள ரஷ்யா கொரோனாவுக்கான பாதிப்பு அட்டவணையில் உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

;