tamilnadu

img

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது...  

மாஸ்கோ 
வடதுருவத்தில் 14 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய பரப்பளவு உடைய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உள்ளது. அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாறாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிய நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். எனினும் ரஷ்ய அரசின் அசத்தலான மருத்துவ சிகிச்சையால் பலி எண்ணிக்கை கொஞ்சம் கட்டுக்குள் உள்ளது ஆறுதலான விஷயம்.   

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10 ஆயிரத்து 699 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 90-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 608 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பதிப்பில் ஏற்கெனவே ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகள் 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில்,  ரஷ்யாவும் அந்த பட்டியலில் நுழைகிறது. அதுவும் மிக குறுகிய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.    

;