tamilnadu

img

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது...   

மாஸ்கோ 
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனினும் தினசரி பாதிப்பில் சற்று மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கு மேல் இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்குள் உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,811 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8 லட்சத்தை (8,00,849) கடந்துள்ளது. வெள்ளியன்று ஒரே நாளில் 154 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,046 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,444 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 5,88,774 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 1.99 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  

;