பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த 8 தினங்களாக இடைவிடாது கனமழை பெய்து வந்தது .இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் ரெசியில் 5 பேரும், ஒலிண்டவில் 3 பேரும், அப்ரன் லிமாவில் 5 பேருமாக மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சார சேவை உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.