tamilnadu

பெய்ஜிங் 6 மணி நேர இடைவெளியில் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

சீனாவில் 6 மணி நேர இடைவெளியில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங் களால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திங்கள் இரவு 10.55 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. பூமிக்கடியில் சுமார் 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் படுகாயங்களு டன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே செவ்வாய் அதிகாலை 5 மணியளவில், அதேபகுதியில் 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 90 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

;