tamilnadu

img

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் முதல் 100 சிறுவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் தேர்வு

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சி 2018-2019ல் பங்கேற்கும் முதன்மையான 100 சிறுவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் தேர்வாகியுள்ளனர்.


நிகழ்கால உலகின் பிரச்சனைகளை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்க்கும் 13லிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலகளவிலான போட்டியை கூகுள் நிறுவனம் நடத்தி வருகிறது. இப்போட்டியில் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் கண்டுபிடிப்புகளை முன்பதிவுகள் மூலம் ஆய்வு செய்து முதன்மையான 100 இளம் தலைமுறை ஆராய்ச்சியாளர்களை கூகுள் தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து குடிநீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத ஆற்றல் உள்ளிட்ட தலைப்பில் நாவல் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்த 18 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சி போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

;