tamilnadu

img

மெக்சிகோ விமான விபத்தில் சிக்கி 13 பேர் பலி

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கிளம்பிய தனியார் விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மெக்ஸிகோவின் வட பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக மெக்ஸிகோவின் கௌஹீலியா அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்துகான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


;