tamilnadu

img

சிவப்பு புத்தகம் அழைக்கிறது தோழா! - அ.அன்வர் உசேன்

பிப்ரவரி 21 அன்று ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வாசிப்பு இயக்கத்தை- சிவப்புப் புத்த கப் பயணத்தை வெற்றிகர மாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் இடைக்குழுக்களும் பாரதி புத்தகாலயம் கிளைகள் சார்பாகவும் பரவலான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  கம்யூனிஸ்ட் அறிக்கையில் 7 முன்னுரைக ளும் 4 அத்தியாயங்களும் உள்ளன. அதில் மிக முக்கியமானது “முதலாளிகளும் பாட்டாளி களும்” எனும் முதல் அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தில்தான் முதலாளித்துவம் தோன்றி யதையும் அதன் உற்பத்திமுறைகளின் பல்வேறு அம்சங்களையும் மார்க்சிய ஆசான்களான காரல்மார்க்சும்,பிரடெரிக் ஏங்கெல்சும் சுருக்க மாக, ஆனால் மிக ஆழமாக ஆய்வுசெய்கின்ற னர். முதலாளித்துவம் தனக்குத் தானே எப்படி சாவுமணி அடித்துக் கொள்கிறது என்பதை யும் அற்புதமாக விளக்குகின்றனர்.

முதலாளித்துவத்தின் உற்பத்தி முறை

முதலாளித்துவத்தின் உற்பத்தி குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: “உற்பத்தி கருவிகளையும் அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும் அவற்றோடு கூடவே ஒட்டு மொத்த சமுதாய உறவுகளையும் இடைய றாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவம் உயிர்வாழ முடியாது.” (சிவலிங்கம் மொழிபெயர்ப்பு/பக்: 44). உற்பத்தி கருவிகளில் (அதாவது தொழில் நுட்பத்தில்) ஏன் இடையறாத மாற்றங்களை முதலாளித்துவம் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது? ஏன் அது முதலாளித்துவத்திற்கு வாழ்வா-சாவா போராட்டமாக உள்ளது?  

உற்பத்திக்கான தொழில்நுட்பத்திலும் அதனை நடைமுறைப்படுத்தும் மேலாண்மை நிர்வாகத்திலும்  முதலாளித்துவம் பல நவீன உத்திகளை உருவாக்குகிறது. ஆனால் தான் உற்பத்தி செய்த பொருட்களை விற்பதில் தனிப்பட்ட முதலாளிகளிடையே எவ்வித ஒத்து ழைப்பும் ஒருங்கிணைப்பும் இருப்பது இல்லை. சமூகத்திற்கு குறிப்பிட்ட உற்பத்தி பொருளின் தேவை எவ்வளவு என்பதை மதிப்பிட்டு அதனை தமக்குள் பிரித்துக் கொண்டு உற்பத்தி செய்ய முதலாளிகள் முன்வருவது இல்லை. மாறாக  விற்பனை சந்தை முழுவதையுமே தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவும் இலாபம் முழுவதை யும் தான் மட்டுமே அபகரிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு முதலாளியும் திட்டமிடுகிறார். 

மிருக வெறியாக மாறும் இலாப வெறி

இலாபக் கொள்ளையை முழுவதுமாக வளைத்துக் கொள்ள முதலாளிகளிடையே கடும் போட்டி உருவாகிறது. போட்டியாளரை வீழ்த்த முதலாளிகள் எந்த ஒரு தகிடுதத்தத் தையும் செய்ய தயங்குவது இல்லை. போட்டி நிறுவனத்தின் சிறந்த ஊழியர்களை அபகரிப் பது/ சட்டங்களை இயற்ற அல்லது உடைக்க அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் தருவது/ தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்வது மட்டுமல்ல; சில சமயங்களில் தனது போட்டியா ளராக உள்ள முதலாளியையே கொல்வது கூட நடப்பது உண்டு. 

போட்டி முதலாளித்துவம் போட்டியற்ற ஏக போகத்திற்கு வழிகோலுகிறது.  இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முதலாளிகள் உற்பத்திக் கருவிகளில் இடை விடாத மாற்றங்களை அதிவேகமாக அரங் கேற்றுவது அவசியமாகிறது எனவும் இது இல்லையெனில் முதலாளித்துவம் உயிர் வாழ முடியாது எனவும் கம்யூனிஸ்ட் அறிக்கை  குறிப் பிடுகிறது. 1848ம் ஆண்டு மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த இந்த மதிப்பீடு 172 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கண்முன்னே நடக்கும் உண்மை யாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் அலை பேசி களுக்கான சிம்கார்டு விற்பனை சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 15 நிறுவனங்கள் மூடப்பட்டன அல்லது வேறு நிறுவனங்களு டன் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்சமயம் கீழ்கண்ட நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இயங்குகின்றன:

no நிறுவனம்  சிம்கார்டு விற்பனை கோடியில் சந்தை கையிருப்பு 
1  வோடோ போன்- ஐடியா                         37.24               31.73%
2 ரிலையன்ஸ் ஜியோ                           35.52              30.26%
3 ஏர்டெல்                       32.56               27.74%
4 பி.எஸ்.என்.எல்.                        12.04               10.26%

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ அழிக்க அரசாங்கம் துடிக்கிறது. அதன் சந்தையை கைப்பற்ற ஏனைய மூன்று தனியார் நிறுவனங்களும் ஆர்வமாக உள்ளன. அதே சமயத்தில் மோடி அரசாங்கத்தின் உதவியுடன் சந்தை முழுவதையுமே அபகரிக்க ஜியோ முயல் கிறது. தமது இலாபத்தை சீர்குலைத்து ஜியோ தனது இலாபத்தைக் பெருக்கிக் கொள்ள நய வஞ்சகமான முறைகளைப்  பின்பற்றுகிறது என ஏனைய இரு தனியார் நிறுவனங்களும் புகார் கூறி வழக்கு தொடர்ந்துள்ளன. இலாப வெறி முதலாளிகளின் மிருக வெறியாக மாறுகிறது.

தொழில்நுட்ப  மாற்றமும் திவாலும்

உற்பத்தி உலகில் உருவாகும் ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றமும் ஏற்கெனவே உள்ள தொழில் நுட்பத்தை களத்திலிருந்து துரத்து கிறது. பல சமயங்களில் வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; அதனை சார்ந்துள்ள நிறுவனங்க ளும் கூட, புதிய தொழில்நுட்பத்தை கைக்கொள்ளத் தயங்கினால் அவையும் வீழ்கின்றன. இவ்வாறு படுகுழியில் வீழும் நிறுவனங்கள் தம் கீழ் பணி யாற்றும் தொழிலாளர்களையும் சேர்த்து படு குழியில் தள்ளிவிடுகின்றன.  சில சமயங்களில் தனிப்பட்ட முதலாளிகள் வீழ்ந்தாலும் பல சமயங்களில் முதலாளிகள் தம்மை மட்டும் பாதுகாத்து கொள்கின்றனர்.

  • புகைப்பட கருவியில் சென்சார் தொழில் நுட்பத்தை புகுத்தி சோனி நிறுவனம் கோட்டக் நிறுவனத்தை திவாலாக்கியது.
  • கணினி தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனமும் மைக்ரோ சாஃப்டும் நுழைந்ததன் விளைவாக ஐ.பி.எம். வீழ்ந்தது.
  • அலைபேசியில் தொடு திரை நுட்பம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியதன் விளைவாக வீழ்ந்த நோக்கியா இன்று வரை தலை நிமிரவில்லை. 

இப்படி பல உதாரணங்களை பட்டியலிட முடியும்.  

 

மருத்துவரின் கத்தியும் கொலைகாரனின் கத்தியும்

உற்பத்திக் கருவிகளின் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மிகப்பெரிய இடத்தை பெற்றுள் ளன. 2019ம் ஆண்டு 22.50 இலட்சம் ரோபோக் கள் உற்பத்தி துறையில் உள்ளதாகவும் இது 2030ம் ஆண்டு 200 இலட்சமாக உயரும் எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் FANUC எனும் ஆலை முழுதுமே ரோபோக்க ளால் இயங்குகிறது. ஒரு மனித உழைப்பாளி கூட இல்லை. இத்தகைய உற்பத்தி முறை “Lights Out” என அழைக்கப்படுகிறது.  ரோபோக்களின் படையெடுப்பு இந்தியாவி லும் அரங்கேறி வருகிறது. நொய்டாவில் உள்ள மாருதி நிறுவனத்தில் 2000 ரோபோக்கள் வெல்டிங் பணியை செய்கின்றன. ஒரு புறத்தில் இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றம் புறக்க ணிக்க முடியாத ஒன்றாக உருவாகிறது. மறு புறத்தில் வேலையின்மையையும் சமூக சீர் குலைவையும் விளைவிக்கிறது. 2030ம் ஆண்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 80 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

உற்பத்தியில் பிரம்மாண்டமான முறையில் ரோபோக்கள் புகுத்தப்படுகின்றன. ஆனால் மனித கழிவுகளையும் சாக்கடையை அகற்றும் பணியிலும் மனிதர்கள் பயன்படுத்தப்படும் அவல நிலை இந்தியாவில் தொடர்கிறது. முதலாளித்து வம் ஏன் இத்தகைய பணிகளுக்கு ரோபோக் களை உருவாக்குவது இல்லை? ஏனெனில் இதில் இலாபம் கிடைக்காது. இத்தகைய தொழிலை செய்பவர்கள் தமது பணியை புனிதமான பணி என நினைக்கிறார்கள் என கூறுவோர் ஆட்சி யில் உள்ள சமூகத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? “தொழில்நுட்ப முன்னேற்றம் கத்தியை போன்றது; அது மருத்துவரின் கைகளில் இருந் தால் உயிரை காப்பாற்றுகிறது; அதே கத்தி கொலைகாரனிடம் இருந்தால் உயிரை பறிக்கிறது” என்றார் தோழர் பி.டி. ரணதிவே அவர்கள்! ஆம்! முதலாளித்துவத்தின் கைகளில் இருக்கும் தொழில்நுட்பம் இலாப வெறிக்காக பயன்படுகிறது. எனவே கொலையாளியின் கத்தியை போன்றது.

முதலாளித்துவம் உருவாக்கும் சீர்குலைவு

இத்தகைய மாற்றங்களின் விளைவாக சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் முத லாளித்துவம் சீர்குலைவை உருவாக்குகிறது. உற்பத்தியில் தொடர்ந்து இடைவிடாத மாற்றங் கள், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இடைவிடாத பாதிப்புகள், முடிவே இல்லாத நிலையற்ற தன்மை- இது முதலாளித்துவம் தொ டர்ந்து அரங்கேற்றும் செயல்முறைகள் ஆகும். புதியதாக உருவானவை நிலைப்பதற்கு முன்பே பழமையாகி மறைந்துவிடுகின்றன என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை.

உற்பத்தியில் மட்டுமல்ல; மனிதர்களுக்கி டையே உள்ள உறவை அப்பட்டமான சுயநல உறவாக முதலாளித்துவம் மாற்றிவிட்டது என குற்றம் சாட்டுகிறது கம்யூனிஸ்ட் அறிக்கை. மருத்துவர், வழக்கறிஞர், மத போதகர், கவிஞர், விஞ்ஞானி என அனைவரையும் தனது கூலி அடிமையாக மாற்றிவிட்டது எனவும் குடும்பத்தில் நிலவிய பாச உணர்வு எனும் வேலியை அழித்து விட்டு குடும்ப உறவை பண உறவாக மாற்றி விட்டது எனவும் தோலுரித்து காட்டுகிறது அறிக்கை. எனவேதான் ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ எனவும் ‘அம்பு எய்தவரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்’ எனவும் பழமொழி கள் உண்டாயின. அறிக்கை கூறும் இந்த கருத்தாக்கம் இன்ற ளவும் பொருந்தும் உண்மை. இதனை எவராவது மறுக்க இயலுமா?

முதலாளித்துவத்தை வீழ்த்தும் வல்லமை யாருக்கு?

சமூகத்தில் சீர்குலைவை தொடர்ந்து அரங்கேற்றும் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாதா? முடியும் என்பது மட்டுமல்ல; அதனை செய்யும் மக்கள் பிரிவு எது என்பதையும் அடை யாளம் காட்டுகிறது அறிக்கை: “ஆனால் முதலாளி வர்க்கம் தனக்கே அழி வைத் தரப்போகும்  ஆயுதங்களை மட்டும் வார்த் தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களை கையா ளப் போகும் மனிதர்களையும் அதாவது நவீன தொழிலாளி வர்க்கமாகிய- பாட்டாளிகளை யும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.” (பக்:50)

முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும்  தவிர்க்க இயலாதது என நம்பிக்கையை முன்வைக்கிறது அறிக்கை: “எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளி வர்க்கம் எதை உற்பத்தி செய்கிறது எனில் தனது சவக்குழியை தோண்டும் பாட்டாளிகளை உற்பத்தி செய்கிறது. (எனவே) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி யும் பாட்டாளிகளின் வெற்றியும் தவிர்க்க இயலாத ஒன்று!” 

ஆனால் இது தானாக நடந்துவிடுமா? இல்லை. மார்க்ஸ் இன்னொரு ஆவணத்தில் குறிப்பிடுகிறார்:  “எவ்வளவு சாதகமான அரசியல் சூழல் இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி அந்த வர்க்கத்தை பயிற்றுவிக்கும் ஸ்தாபனத் தின் பக்குவத்தை பொறுத்தும் எவ்வாறு தனது சக்திகளை அது ஒருங்கிணைக்கிறது எனும் திறமை மூலமே அமைகிறது.”

தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவிக்கும் ஸ்தாபனம் எது? அதுதான் கம்யூனிஸ்டு கட்சி. திறமையும் பக்குவமும் உள்ள கட்சிதான் சமூக மாற்றத்துக்கு முக்கிய தேவை ஆகும். குறிப்பாக இந்தியாவில் ஏழை விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்கள் உட்பட ஏனைய உழைப்பாளி களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமை தாங்கும் கடமை தொழிலாளி வர்க்கத்துக்கு உள்ளது என்பதை பயிற்றுவிக்க வேண்டிய வர லாற்றுக் கடமை கட்சிக்கு உண்டு. அத்தகைய வலுவான கட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை மூலமாக மார்க்சிய ஆசான்கள் நமக்கு தரும் முக்கிய வழிகாட்டுதல் ஆகும். அத்தகைய மகத்தான ஆவணமான கம்யூ னிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கமான ‘பிப்ர வரி 21 சிவப்பு புத்தகப் பயணத்தை’ மாபெரும் வெற்றி இயக்கமாக முன்னெடுப்போம்.

 


 



 

;