tamilnadu

img

மதமும் அரசியலும் - டி.கே.ரங்கராஜன்

உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடியை கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கி யுள்ளது. எந்த நாடும் நெருக்கடியின் பிடியி லிருந்து தப்ப முடியவில்லை.  உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்கா ஆட்டம் காண்கி றது. இந்தியாவையும் ஆட்சியாளர்கள் முட்டுச்சந்தில் நிறுத்தியுள்ளனர். 

நம்முடைய நாட்டில் மோடி அரசு சுகாதார, பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கி றது. ஒருபுறத்தில் அனைத்தையும் உள்நாட்டு பெரு முத லாளிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் தாரை வார்க்கிறது. மறுபுறத்தில் மதவெறி நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே பகைமையை விதைக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு முழுவதும் நடந்துகொண்டு இருக்கும் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமா னப் பணி துவங்கியுள்ளது.

நீதித்துறையையும் கூட தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மோடி அரசு கொண்டுவர முனைகிறது. வலதுசாரிப் போக்கு பலம் பெற்று வலம் வந்து கொண்டிருக்கிறது. பல துறை களில் அடக்குமுறை கோலோச்சுவதை பார்க்க முடிகிறது. வாக்காளர்களில் ஒரு பகுதியினரின் நம்பிக்கையை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் தாங்கள் நினை க்கும் அனைத்தையும் செய்வதற்கான அதிகாரமும், அங்கீ காரமும் தங்களிடம் இருப்பதாக கருதத் தலைப்பட்டு விட்டனர். அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட நாடாளு மன்றம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நிறுவனங்க ளையும் அடித்து நொறுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 

சாமியார்களின் அரசியல்

இது ஒருபுறமிருக்க, வரலாற்றுக் காலம் தொட்டு அரசியலில் சாமியார்கள் செல்வாக்கு செலுத்த முயல்வது நடந்து கொண்டுதான் வந்துள்ளது. குருமார்கள், சன்னி யாசிகள், மடாதிபதிகள், கடவுளின் தூதர்கள் என்று தங் களை அழைத்துக்கொள்பவர்கள் இந்த புற உலகத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலவும், மேலுலக வாழ்க்கைக்கு  மக்களை இட்டுச் செல்வதே தங்களது பணி என்றும் கூறிக்கொண்டாலும் நடைமுறை அரசியலில் தங்க ளது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான வேலையையே அதிகம் செய்து வந்துள்ளனர். ஜார் காலத்திய ரஷ்யாவில் ரஷ்புடீன் என்பவர் மன்னருக்கு நிகரான அதிகாரத்தைப் பெற்று அட்டூழியம் செய்து வந்தார். 

ஆனால், சமயத்துறையில் இருந்து கொண்டே சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்தவர்கள் உண்டு. இந்தியாவிலும் கூட இத்தகையவர்கள் சிறப்பான பணி யினை செய்துள்ளனர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும், தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் இவர்கள் போராடியுள்ளனர்.  சித்தர்கள், ராமானுஜர், வைகுண்ட சாமி கள், ராமலிங்க வள்ளலார், நாராயண குரு, விவேகா னந்தர் என இந்தப் பட்டியல் நீளமானது. 

மறுபுறத்தில் மக்களை பழமையிலேயே இருத்தி வைப்பதை தங்களது நோக்கமாகக் கொண்டவர்களும் மதத்தை அதற்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ள னர். இப்போதும் கூட நாடு முழுவதும் 80 ஆயிரத்திலி ருந்து 1 லட்சம் வரை சாமியார்கள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இவர்களில் பலர் போலிச்சாமியார்கள் என்பது அரசுக்கும் தெரியும். 

போலிகள் ஜாக்கிரதை

இன்றைக்கு போலிச்சாமியார்கள் பலர் அடியாட்கள் பட்டாளத்துடன் வலம் வருகின்றனர். சிலர் வழக்குகளிலே சிக்கி சிறை செல்வதும் உண்டு. வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சிலர் அந்தந்த காலத்தில் பிரபலமாக இருந்து மங்கிப்போவார்கள். சாய்பாபா, கல்கி பகவான் என்று பலரைக் கூற முடியும். இப்போது கூட நித்யானந்தா எனும் சாமியார் தனித்தீவை வாங்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களிடம் ஆசி பெற சென்று அவர்களை பிரபலமாக்கிவிடுவார்கள்.  சந்திரா சாமியார் என்பவர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்களுக்கு குரு போல விளங்கி யவர். போபர்ஸ் வழக்கில் இவரது பெயர் அடிபட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஜெயின் கமிஷன் இவர் மீது புகார் கூறியது. 

தீரேந்திர பிரம்மச்சாரி என்பவர் தன்னைத் துறவி என்று கூறிக்கொண்டவர். ஆனால் ஏராளமான சர்ச்சைகள் அவரைச் சுற்றிவந்தன. அதிகார வட்டத்திற்குள் அதிகாரம் செலுத்துபவராக அவர் இருந்தார்.  இப்போது மோடி ஆட்சியில் யோகா குரு என்ற பெயரில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் பதஞ்சலி நிறு வனத்தின் யோகி ராம்தேவ் போல தீரேந்திர பிரம்மச்சாரியும் தம்மை யோகா மாஸ்டர் என்று கூறிக்கொண்டவர்தான்.  தங்களுக்கு வேண்டியவர்கள் அதிகாரத்திற்கு வருவ தற்கும், கறுப்புப் பணத்தை கைமாற்றுவதற்கும் இத்தகைய ‘துறவிகள்’ பெரும் உதவியாக இருப்பார்கள். 

ஊடகங்களாலும் மத்திய ஆட்சியாளர்களாலும் பிரபலப்படுத்தப்பட்டு தற்போது உலகத்திலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கையில் வைத்தி ருப்பவராக முன்னிறுத்தப்படுபவர் ஜக்கி வாசுதேவ். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையைத் தனதாக்கிக் கொண்ட வர். ஈசா பவுண்டேசன் என்ற ஒரு அமைப்பை நடத்தித் தனது ராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொண்டவர்.  இந்திய பெரு முதலாளிகளின் முழுமையான ஆதரவு இவருக்கு உண்டு. நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். இந்த கார்ப்பரேட் ரிஷியின் மூலமும் ரசிக்கத் தக்கதாக இல்லை. இவர் மீது கொலைகள், பாலியல் பலாத் காரம், நில ஆக்கிரமிப்பு, மோசடி என அனைத்து வகையானப் புகார்கள் மட்டுமின்றி கிரிமினல் வழக்குக ளும் உண்டு. 

ஜக்கியின் அவதார ரகசியம்

கிருஷ்ணமூர்த்தி என்கிற ஜாவா வாசுதேவன், ஜக்கி வாசுதேவாக அவதாரமெடுத்தார்.  தன்னுடைய மனைவி யைக் கொலை செய்துவிட்டதாக இவர் மீது வழக்கு தொடுக் கப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பல ஆண்டு களுக்கு முன்பு மத்தியப் புலனாய்வுத் துறையால் தேடப் படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவருக்கு மோடி அரசு 2017ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கொடுத்து கவுரவித்தது. 

1994இல் வெள்ளியங்கிரி மலைப்பகுதியை ஆக்கிர மித்து சுமார் 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்ட வர். பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்க ளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இடத்தையும் இவர் கபளீகரம் செய்தார். இவரது நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் மக்களைத் திரட்டி போரா டின. ஆனால் ஆட்சியாளர்களிடம் இருக்கும் செல்வாக்கு இவரை காப்பாற்றி வருகிறது. 

ஜக்கி வாசுதேவுக்கு ஆண்களும் பெண்களுமாக 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சீடர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல பேரின் சொத்தை இவர் அபகரித்துக்கொண்டார். தங்க ளது பெண் குழந்தைகளை ஜக்கி வாசுதேவ் மூளைச்  சலவை செய்து நிர்ப்பந்தமாக அடைத்து வைத்திருப்பதாகப் பல பெற்றோர்கள் புகார் செய்தனர். ஆனால் இவரை எதுவும் செய்ய முடியவில்லை. யோகா வகுப்புகளை மட்டுமின்றி ஈசா வித்யா பள்ளிகள் என்ற பெயரில் பல இடங்களில் பள்ளிக்கூடங்களையும்  நடத்தி வருகிறார். மேலும் ஈசா கிராமோத்சவம் என்ற பெயரில் 4200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இவரது அமைப்பு காலூன்றி உள்ளது. இவ ருடைய சீடர்கள் பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். 

இதில் கொடுமை என்னவென்றால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.டி.நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் போன்றவர்களுக்கு இவர் மேலாண்மை பயிற்சி அளித்து வருகிறார். இவருடைய ‘திருப்பணியை’ ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசே தன்னுடைய அதிகாரிகளை இவரி டம் அனுப்பி பயிற்சி பெற வைக்கிறது. 

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செல்வாக்கு மிக்க நூறு பேரில் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது. 2019ம் ஆண்டு  இந்தியா டுடே பத்திரிகை  சக்தி வாய்ந்த 50 பேரில் ஒருவ ராக இவரைத் தேர்வு செய்தது. 

2020 ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில்  கலந்து கொண்டு இவர் உரை நிகழ்த்தினார். பன்னாட்டு முதலாளிகளிடமும் இவருக்கு இருக்கும் செல்வாக்கை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த காலத்தில் மருத்து வர்கள், விஞ்ஞானிகளின் கருத்துக்களைக் கேட்டு அதன் படி அரசுகள் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் மோடி அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜக்கி வாசுதேவிடம் காணொளி மூலம் ஆலோசனைக் கேட்க வைக்கிறது. அந்த ஆலோசனையில் இஸ்ரோவின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஜக்கியும் எல்லாம் தெரிந்த ஏகாம் பரம்போல கொரோனா காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். 

ஜக்கி மீதே வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின் போது திருப்பூ ரில் பிடிபட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டது. அப்போது இவரது பெயரும் அடிபட்டது. பிறகு அது ஒரேடி யாக அமுக்கப்பட்டுவிட்டது. இந்த லட்சணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கார்ப்பரேட் சாமி யார் ஆலோசனை வழங்குகிறார். சிபிடிடி தலைவர் இந்த ‘சத்குரு’விடம் வருமான வரித்துறைக்கும், வரி செலுத்துப வருக்கும் இடையில் உள்ள இடைவெளியை எவ்வாறு குறைப்பது என ‘அருளாசி’ பெற்று அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

பழங்குடி மக்களின் நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமித்து, வன விலங்குகளின் வாழ்விடங்களையும் யானைகளின் வழித்தடங்களையும் அழித்து, இவரால் உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 உயர ஆதி யோகி சிலையை நிறுவப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப் பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக புகார் இருந்த போதும், 2018 ஜூலை 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியங்கிரி மலைக்கே வந்து இந்தச் சிலையை திறந்து வைத்தார். சிவராத்திரியின் போது பெரும் விளம்பரத்தின் மூலம் இங்கு மிகப்பெரிய கூட்டம் கூட்டப்படுகிறது. ஆட்ட மும், பாட்டமும் தூள் பறக்கிறது. கட்டும் கட்டணத்திற்கு ஏற்ப பக்தர்கள் ‘சத்குருவை’ தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்தனைக்கும் ஆசைப்படுபவர்

“அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது இவரது கோஷம். இதன் மூலம் நுகர்வுக் கலாச்சாரத்தையே இவர் முன்மொழி கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டவராக தன்னை இவர் காட்டிக் கொண்டாலும்  அப்பட்டமான ஆர்எஸ்எஸ்-பாஜக-இந்துத்துவா ஆதரவாளர் இவர். கடைந்தெடுத்த வலதுசாரி அரசியலின் பக்கம் உறுதியாக நிற்பவர். பிற் போக்குத்தனமான, பழமை கருத்துக்களை தன்னுடைய புதிய கண்டுபிடிப்புப்போல நவீன மொழியில் பேசுபவர். 

இந்துத்துவா வாதிகள் பிரச்சாரம் செய்கிற பசுவதைத் தடுப்பை இவரும் ஆதரிக்கிறார். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசும் ஆளும் வர்க்கமும் அடக்குமுறைகளை ஏவும்போதெல்லாம் இவர் ஆஜராகி ஆளும் வர்க்கத்தின் கொடும் குரலை எதிரொலிப்பார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான போது இவர் அந்த ஆலைக்கு ஆதரவாக ஆஜரானார். போராடியவர்களைக் கண்டித்தார். இவருடைய பிர சங்கங்களில் பாஜகவின் ஆழமான இசுலாமிய வெறுப்பு வெளிப்படும். மதமாற்றம் கூடாது என்றார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்த குடி யுரிமைச் சட்டத்திருத்தத்தைக் கூட இவரால் கூச்சமின்றி ஆதரிக்க முடிந்தது. 

அதுமட்டுமின்றி மோடி அரசு கொண்டு வந்த அநியாய மான ஜிஎஸ்டி வரி விதிப்பையும் இவர் பகிரங்கமாக ஆதரித்தார்.  டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை வெளிப்படை யாக எதிர்க்கிறார். இதன் மூலம் தன்னுடைய அறிவியல் விரோத போக்கை வெளிப்படுத்துகிறார். 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அசல் குரல்

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் குரலில்தான் இவர் அனைத்துப் பிரச்சனைகளிலும் கருத்துக் கூறி வருகிறார். சுதேசியை ஆதரிப்பது போல காட்டிக்கொண்டாலும் அப்பட்டமான கார்ப்பரேட் பொருளாதார ஆதரவாளராகவே இவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. 

இந்தியாவின் அரசியல் சாசனம் அழுத்தமாக வலியுறுத்தும் மதச்சார்பின்மையை ஆர்எஸ்எஸ்காரர்க ளைப் போல இவரும் போலி மதச்சார்பின்மை என்றே கூறுகிறார். சமுதாயத்தில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று நியாயப்படுத்தி, ஏற்றத்தாழ்வான முதலா ளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தையே முன்மொழிகிறார்.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை நல் வாய்ப்பாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பாண்டிச் சேரி ஆளுநர் கிரண்பேடியுடன் இவர் நடத்திய உரை யாடலில் பாரத் என பெயர் மாற்றுவதை ஆதரிக்கிறார். பாரத கண்டம் என்று மந்திரங்களில் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் பாரதம் என்ற பெயரில் ஒரே நாடாக ஒரு ஆட்சி யின் கீழ் எப்போதும் இந்தியா இருந்தது இல்லை. புராணங்க ளில் மட்டுமே அவ்வாறு உள்ளது என்பதையெல்லாம் இவர் ஏற்க மறுக்கிறார். மொத்தத்தில் மோடி அரசுக்கு அனைத்து வகையிலும் முட்டுக்கொடுக்கும் இவர் அந்த அரசின் கொள்கையான இந்துத்துவா மதவெறியையும், கார்ப்ப ரேட் பொருளாதாரத்தையுமே பேசுகிறார். இதனால்தான் ஆர்எஸ்எஸ் இவருக்கு ஆசி வழங்கி இந்த ‘சத்குரு’வை அரசின் ஆன்மீகக் குரு போலவே அங்கீகரித்து நடத்து கிறது. 

17ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளர்ந்து வந்த நிலையில் நிலப்பிரபுத்துவத்தால் தாங்கிப்பிடிக்கப்பட்ட மதநிறுவனங்களோடு அரசு என்னும் நிறுவனத்துக்கு முரண்பாடு ஏற்பட்டது. கத்தோலிக்க மதத்திற்கு எதிராக புறப்பட்ட புராட்டஸ்டண்டு மத உருவாக்கத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடும் உண்டு. 

இந்தியாவைப் பொறுத்தவரை நிலப்பிரபுத் துவத்தின் மிச்சசொச்சங்கள் இன்னும் அப்படியே உள்ளன. முதலாளித்துவம் வளர்ந்தாலும் நிலப்பிரபுத் துவ தத்துவமும் செல்வாக்கும் பல வகைகளில் தொடரவே செய்கிறது. 

முதலாளித்துவ வளர்ச்சியை அதன் மூலம் அரசியலில் ஏற்பட்ட ஜனநாயக வேட்கையை ஏற்க மத  நிறுவனங்கள் உலகம் முழுவதும் மறுத்தே வந்துள் ளன. ஜார் காலத்திய ரஷ்யாவிலும் மதத்திற்கும் அர சிற்குமான மோதல் நடந்தது. இங்கிலாந்தில் மன்ன ராட்சி முறைக்கும் கத்தோலிக்க குரு பீடமான போப் ஆண்டவருக்கும் இடையிலான உரசலில்தான் ஆங்கிலிக்கன் சர்ச்சுகள் உருவாகின. 

ஜெர்மனியில் சிறு உற்பத்தியாளர்கள் தங்களின் வளர்ச்சிக்கு நிலம் வேண்டும் என்று கேட்டபோது மத குருமார்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர். இது தொடர்பாக கெய்சர் அரசின் அணுகுமுறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் வளர்ச்சி அவசியம் என்ற முடிவு எட்டப்பட்டது. 

இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட மதகுரு மார்கள், மடங்கள் தங்களது நலனை பாதுகாத்துக்  கொள்ள ஆட்சியாளர்களை அரவணைத்துக் கொள்வதும், முரண்பாடு ஏற்படுகிற பொழுது முட்டிக் கொள்வதும் நடந்தே வந்திருக்கிறது. சைவ, வைணவ மதங்கள் நிலப்பிரபுக்களை ஆதரித்த நிலையில், புதிதாக உருவான வணிக வர்க்கம் சமண, புத்த மதங்களை ஆதரித்தது. சமண, புத்த மதங்கள் வணிக வர்க்கங்களின் ஆதர வுடன் செழித்தோங்கிய நிலையில் தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் மன்னர்களின் உதவி யுடன் சகல உத்திகளையும் பயன்படுத்தி சைவ, வைணவ மதங்கள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. சமண புத்த மதங்கள் பெரும்அளவில் அழிக்கப்பட்டன.

சைவ, வைணவ மதங்கள் நிலப்பிரபுக்களை ஆதரித்த நிலையில், புதிதாக உருவான வணிக வர்க்கம் சமண, புத்த மதங்களை ஆதரித்தது. சமண, புத்த மதங்கள் வணிக வர்க்கங்களின் ஆதர வுடன் செழித்தோங்கிய நிலையில் தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் மன்னர்களின் உதவி யுடன் சகல உத்திகளையும் பயன்படுத்தி சைவ, வைணவ மதங்கள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. சமண புத்த மதங்கள் பெரும்அளவில் அழிக்கப்பட்டன.

நிலப்பிரபுத்துவத்தைத் தொடர்ந்து முத லாளித்துவம் வளர்ந்து வந்தபோதும் நிலப்பிரபுத்து வத்தின் மிச்ச சொச்சங்கள் தொடர்கிற நிலையில், முதலாளித்துவ அரசின் பல அங்கங்களில் மதம் மிக வும் சக்தி வாய்ந்ததாகவே தொடர்கிறது. மத நிறு வனங்கள் காலத்திற்கு ஏற்றாற்போலும் தங்களை மாற்றிக்கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ, முத லாளித்துவ அமைப்புமுறை இந்தியாவில் ஆழ மாகக் காலூன்றி உள்ள நிலையில், ஜக்கி வாசு தேவ் போன்றவர்கள் பிரபலமாக இருப்பதும் பிரபலப் படுத்துவதும் நடந்து வருகிறது. 

நவீன போதை

அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெ ழுவதைத் தடுத்து மடை மாற்றம் செய்ய இவர்களைப் போன்றவர்களின் ‘ஆன்மீக’ உபதேசங்கள் ஆட்சி யாளர்களுக்கு உதவியாக உள்ளன. நிகழ்கால வாழ்வின் அநீதிகளை பார்க்க விடாமல், நவீன கார்ப்ப ரேட் சாமியார்கள் ஒருவகையான போதையில் மனித மனங்களை ஆழ்த்துகின்றனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களை கடவுளின் அவதார மென்றும் நானே கடவுள் என்றும் கூறிக்கொள் வார்கள். அரசுக்கும் இந்தக் கடவுள்களால் எந்த ஆபத்தும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கடவுள்கள் ஆட்சியாளர்களைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மக்களை அல்ல.

முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தன் மீதான அதிருப்தியை மடை மாற்றம் செய்யவும் இத்தகைய சக்திவாய்ந்த சாமியார் களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கடைந்தெடுத்த வலதுசாரி அமைப்பான ஆர்எஸ் எஸ்ஸால் வழிநடத்தப்படும் பாஜகவின் ஆட்சிக்காலம் போலிச்சாமியார்களுக்கு கொண்டாட்டமான காலமாக உள்ளது.

மதமும் அரசியலும் வேறு வேறானவை. மத நம் பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக இருக்க வேண்டுமேயன்றி அர சியலில் மதம் தலையிடுவது ஆபத்தானது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை உள்ளிட்ட தனிமனித உரிமைகளை வலியுறுத்துகிற அதே நேரத்தில் ஜக்கி மதத்திற்கும், அரசியலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து காரல் மார்க்சிற்கு தெளிவான பார்வை இருந்தது. மதமும் அரசியலும் தனித்தனி யானவை என்பதில் அவர் அழுத்தமான கருத்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக புருனோ பாயருக்கும் மார்க்சிற்கும் நடந்த விவாதத்தில் “கிறிஸ்தவ நாடு என்பது ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற, நாத்திக நாடு உருவாக்கப்பட்டால்தான் அரசியல் விடுதலை சாத்தியம் என்று புருனோ பாயர் கூறிய போது கிறிஸ்தவ அரசு என்பதே ஒரு அரசின் வடிவம்  முதலாளித்துவ மதச்சார்பற்ற அரசு உருவானதும் மதம் முழுமையாக மறைந்துவிடாது என்று கூறிய தோடு, அன்றைய ஐரோப்பிய சூழலை மேற்கோள் காட்டி முதலாளித்துவ அரசு என்பது கிறிஸ்தவ அரசின் முழுமையான இயங்கியல் வடிவமே என்று விளக்கினார். வாசுதேவ் உள்ளிட்ட போலிகளை, ஆர்எஸ்எஸ்சின் ஊதுகுழல்களை அம்பலப்படுத்துவது அவசியமாகும். 

அரசியலிலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் சாரம். மக்களின் மத நம்பிக்கைகள் குறித்த தெளிவான புரிதலை கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட், ஆர்எஸ்எஸ் ஆதரவு சாமி யார்களின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவது அவசியம். இவர்கள் உருவாக்குகிற போதையில் சிக்கியவர்களை விடுவிப்பதன் மூலமே போராட்டப் பாதையை நோக்கி அவர்களை அணிதிரட்ட முடியும்.

கட்டுரையாளர் : மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)




 

;