tamilnadu

img

இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஜூன் 25ல் நகல் எரிப்புபோராட்டம்

சென்னை, ஜூன் 20 - இந்தியையும், சமஸ்கிருதத்தை யும் திணிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது புதிய தேசிய கல்வி வரைவு கொள்கை. 22 ஆம்தேதி நடை பெறும் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த கல்விக் கொள்கை யை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று தமுஎகச தலைவர்கள் வலியுறுத்தினர். ‘திருத்தப்பட வேண்டியது அல்ல, திரும்பப் பெறப்பட வேண்டியதே புதிய தேசிய கல்வி வரைவு கொள்கை’ என்ற முழக்கத்தோடு வியாழனன்று (ஜூன் 20) சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தினிடையே செய்தி யாளர்களிடம் பேசிய தமுஎகச மூத்த  தலைவர் பேரா.அருணன், “இந்தி பேசாத குழந்தைகள் மீது மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. இந்தி பேசுகிற மாநிலங்களில் கூட இந்தி, ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கைதான் உள்ளது. இந்தி பேசு கிற மாநிலங்களில் வேறு மாநில மொழி கற்பிப்பதிலை. மும்மொழிக் கொள்கை  என்பது மோசடியானது. நாட்டில் உள்ள  அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும். மாறாக, புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிரு தத்திற்கு மட்டும் தனி கவுரவம் தரப் பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருதம் பயில அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்று அழுத்தம் திருத்த மாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை முற்றிலு மாக நிராகரிக்க வேண்டும்” என்றார். “புதிய கல்விக் கொள்கைப்படி, மருத்துவக்கல்வியில் மட்டுமல்ல பிஏ, எம்ஏ படிப்புகளுக்கும் நீட் தேர்வு  கொண்டு வரப்படும். கல்வி தற்போ துள்ள பொதுப்பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லப்படும். தேசியக் கல்வி முகமை என்ற ஒன்றை பிரதமர் தலைமையில் அமைக்கப் போகிறார்கள். அந்த அமைப்புதான் இந்தியாவின் கல்விக் கொள்கையை கண்காணிக்கும். மாநில உரிமை பறிபோகும். நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் எதிர்க்க வேண்டும்” என்றும் அரு ணன் கூறினார்.

“புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் ஏழை எளிய மாண வர்களுக்கு எதிராக உள்ளது. பன்னி ரன்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பிறகு எதற்கு நுழைவு தேர்வு நடத்த வேண்டும்? எனவே, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்” என்றார் தமுஎகச துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி. தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன்தீட்சண்யா கூறுகையில், “பழமைவாதிகள் வேத, மநு அடிப்படையில் நாட்டை மறு கட்டு மானம் செய்ய முயற்சிக்கின்றனர். அதை நுட்பமாக அமல்படுத்த புதிய  கல்விக் கொள்கையை கொண்டு  வந்துள்ளனர். அனைத்து மட்டங்களி லிருந்தும் குழந்தைகளை வடிகட்டும் வகையில் கல்விக்கொள்கை வடி வமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

“நீட் தேர்வுக்கு தனியாரிடம் பயிற்சி  பெறுவது போல் ஒவ்வொரு பாடத் திற்கும் நுழைவு தேர்வு கொண்டு வந்து பயிற்சி மையத்தை நோக்கி மாண வர்களை தள்ளுகிறார்கள். டீச்சிங் இன்டஸ்ட்ரி என்பதை கோச்சிங் இன்டஸ்ட்ரியாக மாற்றுகிறார்கள். கல்வியை கார்ப்பரேட்மயமாக மாற்றுகிறார்கள். ஒரே சாதி, ஒரே சுடுகாடு என்று சொல்லாமல் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை என் கிறார்கள். அந்தந்த மாநி லங்களின் தனித்தன்மை, பண்பாடு  போன்றவற்றை கருத்தில் கொள்ளா மல் இது கொண்டு வரப்படுகிறது. இந்த கல்விக்கொள்கை நவீன அடி மைத் திட்டத்தை கொண்டுள்ளது. எனவே, இதை முழுமையாக நிரா கரிக்கிறோம்.” என்றும் அவர் கூறி னார். “புதிய கல்விக் கொள்கை தேசிய நலனுக்கும், சமூகநீதிக்கும் எதி ரானது. எனவே, 22ந் தேதி நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஒட்டுமொத்தமாக தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

;