tamilnadu

img

உச்சநீதிமன்றமும் விதி விலக்கல்ல! - பிரகாஷ் காரத்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 அன்று ஓய்வு பெற்றார். நீதிபதி எஸ்.ஏ. பாப்டே புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ளார். நாட்டின் உச்சபட்ச நீதிபீடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பரிசீலிக்க பொருத்தமான தருணம் இது. 

நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்கள் அரசியல் அமைப்புக்கு இணக்கமானதா என்று பரிசீலித்து குடி மக்களின் அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பான அமைப்பே உச்சநீதிமன்றம்.  கெடுவாய்ப்பாக கடந்த சில காலமாக அரசியல் அமைப்பின் காவல்காரனாக நின்றுகொண்டு பொறுப்பு களை நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் தோல்வி கண்டுள் ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. எதேச்சதிகாரத் தன்மை கொண்ட இந்துத்துவ சக்திகளின் ஆட்சி, அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பை தகர்க்க முயற்சிக்கும்பொது இவ்வாறு நடந்தேறுகிறது என்பது தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாகிறது. நீதிபதி கோகோய் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவ தற்கு மாறாக, நம்பிக்கை போன்றவற்றில் பெரும்பான்மை வாதத்துடன் உச்சநீதிமன்றம் சமரசம் செய்து கொண்டது.

மறுக்கப்பட்ட நீதி

கடந்த ஓராண்டில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் இந்த உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. இது நீதித் துறையின் சுதந்திரத் தன்மைக்கும், உயிர் சக்திக்கும் எதிரான தாகும். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தான் முதல் தோல்வி. குடிமக்களின் அடிப்படை உரிமை களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். ஆனால், அண்மைக் காலத்தில் ஜம்மு- காஷ்மீரில் குடிமக்களின் அடிப்படை உரிமை களை பாதுகாப்பதற்காக தலையிடுவதில் நீதிமன்றம் தோல்வி கண்டது. அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவை  ரத்து செய்து ஆகஸ்ட் 5 முதல் அந்த மாநிலத்தை சிதைத்தபோது குடிமக்களின் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டன. அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்க ளும் சிறை வைக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பும் மனுக்களும் அவற்றில் இருந்தன.    

இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கையாண்டவிதம் எவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும். முகமது யூசுப் தாரிகாமிக்காக சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த ஆட்கொணர்வு மனுவானாலும், பத்தி ரிகை சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித் தானாலும், குடிமக்களின் சுதந்திர பயணம் குறித்தானாலும் அவற்றில் அரசியலமைப்பின் 19(1) பிரிவின்படி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்த உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேற்சொன்னவை குறித்த அனைத்து மனுக் களையும் பரிசீலிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும், அரசியலமைப்பின் 370, 35ஏ பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிரான மனுக்களை விசாரிப்பதற்காக ஐந்து நீதிபதிகள் அமர்வும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் உச்சநீதிமன்றத்தின் மூன்று உறுப்பினர் அமர்வு ஒரு மனுவிலும் தீர்ப்பு கூறவில்லை. குழந்தைகளை சிறை யில் அடைத்தது குறித்த அவசரத் தன்மை கொண்ட மனுக்க ளில் கூட விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 3 அன்று நடைபெறும்.  

நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தாமதமாவது நீதி மறுக்கப்படு வதற்கு சமமானது. இது தவறான கொள்கைகளிலிருந்து தப்பிக்க அரசுக்கு அல்லது நிர்வாகத்திற்கு உதவும்.

தேர்தல் பத்திரங்கள்

மறுக்கப்படும் நீதிக்கான மற்றொரு உதாரணம், தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலை மையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிதான் பெயர் வெளிப்படுத்தாத நபர்களிடமிருந்து பணம் குவிக்க தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தியது. ஆனால் வழக்கு விசாரணையின் போது அரசியல் கட்சிகளிடமிருந்து நீதிமன்றம் கேட்ட நிதி விவ ரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணை யம் மே 30க்கு முன்பே வழங்கியது. அதாவது தேர்தல் முடிந்த பிறகு. ரூ.6,000 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அரசு நிர்வாகத்துடனான ‘இணக்கமும்’ அவர்களை விசாரிக்க தயங்குவதும் எதிர்வரும் நாட்களில் நீதித்துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. 

அயோத்தி தீர்ப்பு

அயோத்தி குறித்து உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு, அரசியலமைப்பின் மதச்சார்பின்மை மாண்புகளை நிலைநாட்டுவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை வெளிப்படுத்துகிறது. தீர்ப்பின் சாரம் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்பாலான ஆவணங்களுக்கும் முக்கியத்து வம் அளிப்பதாகும். பெரும்பான்மைவாதத்துடன் செய்து கொண்டுள்ள இந்த சமரசம் கடுமையான பின்விளைவுக ளுக்கு மட்டுமல்லாது, தேசத்தின் மதச்சார்பின்மை அடித் தளத்திற்கு சவால் விடுக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு ஊக்கமளிக்கவும் செய்யும்.

சபரிமலை - ஊசலாட்டம்

இத்தகைய ஊசலாட்டம் சபரிமலை தீர்ப்பின் மீதான சீராய்வு மனுக்களை ஐந்து நீதிபதிகள் அமர்வு கையாண்ட விதத்திலும் காண முடியும். சீராய்வு மனு விசாரிப்பதற்கான சாதாரண நடவடிக்கைகளுக்கு மாறான பெரும்பான்மை தீர்ப்பு, நீதிமன்றத்தின் மற்ற அமர்வுகள் பரிசீலித்து வரும் பொதுப் பிரச்சனைகளை சேர்த்து, விரிவான ஏழு நீதிபதிகள் ஒரு அமர்வுக்கு விட்டுள்ளது. சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பு கூறாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. உண்மையில் அந்த அமர்வு செய்திருக்க வேண்டியது புதியதும் முக்கியத்து வம் உள்ளதுமான சான்று கிடைத்துள்ளதா என்கிற சரிபார்ப்பே ஆகும். அல்லது ஆவணங்களில் தவறு ஏற்பட்டுள்ளது என்றா லும் சீராய்வை அனுமதித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல், சபரிமலையில் பெண்களை அனுமதித்து ஐந்து உறுப்பினர் அரசியல் சாசன அமர்வின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அமர்வின் மூன்று நீதிபதிகள் வளைத்த பாதையில் சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்கேயும் அசாதாரணமான முறையில் கோயில் நுழைவுக்கான உத்வேகம்- பெண்களின் உரிமைகளைவிட நம்பிக்கைக்கே  முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஒரு தலைமை நீதிபதி அல்லது ஏதோ ஒரு நீதிபதியின் தடுமாற்றம் மட்டுமல்ல, அரசு மனப்பூர்வமாக மேற்கொண்ட முயற்சியின் தயாரிப்பாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் மோடி அரசு நீதிபதி கள் நியமனங்களிலும், பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு அளிப்பதிலும் தலை யிட்டு வருகிறது. அண்மைகால உதாரணம் அகில் குரேஷி. மத்தியப்பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதி லிருந்து தடுக்கப்பட்ட குரேஷி திரிபுரா உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  தேசத்தின் அனைத்து நிறுவனங்களிலும் இந்துத்துவா கருத்தியல் ஊடுருவுகிறது. கெடுவாய்ப்பாக உச்சநீதிமன்ற மும் இதற்கு விதிவிலக்கல்ல.   

பீப்பிள்ஸ் டெமாக்ரசி 
தேசாபிமானியிலிருந்து  தமிழில்: சி.முருகேசன்





 

;