tamilnadu

img

கஞ்சா கும்பல்களும் பாரதிய ஜனதா கட்சியும்...

...ஏதோ ஒருவகையில் அல்லது பலவகையில் பாஜக சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்களே நிரூபித்து வருகிறார்கள்.ராமேஸ்வரம் கஞ்சா கோஷ்டிகளில் சிலர் பாஜகவோடு தொடர்புள்ளவர்கள். ஆகவேதான் உடனடியாக எச் இராசா அங்கே மின்னல் வேகத்தில் செல்கிறார். முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயல் எனக்கூறுகிறார். இவரைத்தொடர்ந்து பாஜகவின் முக்கியப்புள்ளிகள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல்  ட்விட்டரில் இராமநாதபுரத்தைப் பதிவிடுகிறார்கள். இதைமதக்கலவரமாக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வருண்குமார், இது மதங்களின்காரணமாக நடந்த கொலையல்ல எனப் பதிவிடுகிறார்.சரியான நேரத்தில் மிகச்சரியாகத் தலையிட்டுள்ளார் கண்காணிப்பாளர்.அவர் பொய்கூறவில்லை. மிகைப்படுத்தவும் இல்லை.இராமேஸ்வரம் புண்ணியநகரம் எனக்கூறிக்கொண்டே இன்னொருபுறத்தில் கஞ்சாவியாபாரத்திற்கு பெயர்பெற்ற நகரமாக மாறிவருவதை மக்களும் அறிவார்கள். இவ்வாறான வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழில் பாதுகாப்பு கருதியோ என்னவோ பாஜகவோடு தொடர்புடையவர்களாக  உள்ளனர்.அல்லது இதுபோன்ற நபர்களை ஆக்கப்பூர்வ அரசியல்பணிக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கலாம். திருச்சி, திருப்பூர் கடந்தகால கொலைகளும் கொலைக்காளான நபர்கள் கஞ்சாவோடு தொடர்புடையவர்களாக இருப்பதையும் இச்சம்பவங்களில் பாஜக அலறித்துடித்து அறிக்கைவிட்ட நடவடிக்கைகளையும் நினைவுபடுத்திக்கொண்டால் நல்லது.தமிழகத்தில் பாஜக பக்திவேடத்தில் இருப்பதாக கருதவேண்டாம்.கஞ்சா வடிவத்திலும் சமூகவிரோத சக்திகளை தங்கள் அமைப்புக்குள் சேர்க்கிற புண்ணியகாரியத்திலும் ஈடுபட்டுவருகிறார்கள். இது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ காவல்துறைக்கு நன்கு தெரியும். அஇஅதிமுக அரசுக்கும் நன்குதெரியும்.

எம்எல்ஏ, எம்பிகளை பிற கட்சிகளிலிருந்து கவர்ந்து பாஜக பக்கம் கொண்டு செல்வது ஒருவித அரசியல் என்றால் சமூகவிரோதக் கும்பல்களை தங்களின்  ஆயுதங்களாக பயன்படுத்துகிற  அரசியலையும் சேர்த்தே பாஜகவினர் செய்துகொண்டிருக்கிறார்கள்.அரசியலில் சமூகவிரோத சக்திகள் புகுந்தால் என்ன ஆகும்? முதலில் காவல்நிலையங்களுக்குதான் தீ வைப்பார்கள். வடமாநிலங்களில் நிலைமை அதுதானே. இது பேராபத்தானது.தமிழ்நாட்டின் காவல்துறை தமிழ்நாட்டு மக்களின் ஒரு அங்கம். அவ்வப்போது மட்டுமல்ல, சாதி மதக்கலவரங்களை அடக்கி தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதென்பது அரசின் சாதனை அல்ல. தமிழ்மண்ணின் மரபு. இயல்பு. அதை தமிழ்நாட்டு காவல்துறை எப்போதும் பின்பற்றியே வந்துள்ளது.இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவிரித்தாடும் கஞ்சா வியாபாரத்தினை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தப் போகிறதா? அல்லது அதன்மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையை பாஜக விற்கு பலியிடப்போகிறதா என்பதே கேள்வி.

===கே.பாலபாரதி==

;