tamilnadu

img

தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணம் 12 ரூபாயாக குறைப்பு - டிராய் அறிவிப்பு

தொலைக்காட்சி சேனல்களுக்கான மாத சந்தா தொகையில் அதிகபட்ச கட்டணத்தை 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.

டிராய் நேற்று வெளியிட்டுள்ள கட்டண மாற்று அறிவிப்பில், 5 ரூபாயாக இருந்த ஒரு சேனல்க்கான அதிகபட்ச கட்டணம் 19 ரூபாய் வரை உயர்ந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டண சேனலின் அதிகபட்ச கட்டணத்தை 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனமும் 12 ரூபாய்க்கு அதிகமாக சேனலின் கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது என்றும் 130 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் வழங்க வேண்டுமென்றும் கூறியுள்ள டிராய் வரும் 30-ஆம் தேதிக்குள் புதிய கட்டணப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் தனியார் தொலைக்காட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. மேலும் இந்த கட்டண குறைவால்  கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தா கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

;