tamilnadu

img

பட்டாணி இறக்குமதி மீதான தடையை தளர்த்த கோரிக்கை

சென்னை,பிப். 6- பட்டாணி இறக்குமதி மீதான கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்  கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனி சாமி கடிதம் எழுதியுள்ளார்.  அதில் பட்டாணி இறக்குமதியை எளி தாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாணி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும். பட்டாணி விலையேற்றத்தால் மாவு உற்பத்தி இன்றி சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட் டாணி, பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.