tamilnadu

img

வாராக்கடன் அதிகரிப்பால் ஆர்.பி.எல் வங்கியின் நிகர லாபம் 73 சதவீதம் சரிவு

வாராக்கடன் அதிகரிப்பால் ஆர்.பி.எல் வங்கியின் நிகர லாபம் 73 சதவீதம் சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் தனியார் வங்கியான ஆர்.பி.எல் வங்கியின் நிகர லாபம் வெறும் 54 கோடி ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 205 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், ஆர்.பி.எல் வங்கியின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 73 சதவீதம் சரிந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பே என்று கூறப்படுகிறது. வங்கியின் வாராக்கடன் விகிதமானது கடந்த இரண்டாவது காலாண்டில் 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 1.38 சதவீதமாகவும், 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது  காலாண்டில் 1.4 சதவீதமாகவும் இருந்தது. மொத்தம் 1,800 கோடி ரூபாய் மிக அழுத்தத்திற்கு உள்ளான வாராக்கடனாக இருப்பதாகவும். அதிலும் குறிப்பாக இந்த தொகையானது 4 குழுமத்திலிருந்து வர வேண்டிய பாக்கி என்றும், இந்த 1,800 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் ஆர்.பி.எல் 1,377 கோடி ரூபாய் வாராக்கடனைக் கண்டுள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஜூன் காலாண்டில் 225 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;