புதுதில்லி, மே 9- கொரோனாவால் தங் கம் இறக்குமதி வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி ஆகி யுள்ளது. உலக அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா நீண்டகாலமாக முதலிடத் தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா ஆண்டு ஒன்றுக்கு சுமார் 900 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாத காலகட்டத்தில் 110.18 டன் தங்கம் இறக்கு மதி செய்திருந்தது. ஆனால், 2020 ஏப்ரல் மாதத்தில் வெறும் 50 கிலோ தங்கத்தை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தங்கத்தின் மதிப்பு அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டு இறக்குமதி 29 ஆயிரத்து 974 கோடி ரூபாய் என்றி ருந்த நிலையில், அது 2020 ஏப்ரலில் 21.44 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவு என்று கூறப்படுகிறது.