tamilnadu

img

தங்கம் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

சென்னை:
சென்னையில் செவ்வாயன்று (ஜூலை 7) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.37,128க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 5 நாட்களாக ரூ.36,976க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று  தங்கம் கிராமுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங் கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.37,128க்கு விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.4,641-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 53 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகிறது.

;