tamilnadu

img

நடப்பாண்டில் ஜிடிபி 4.5 சதவிகிதமாக சரியும்... நிதியமைச்சகமே ஒப்புக்கொண்டது

புதுதில்லி:
இந்தியாவின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி (ஜிடிபி) 2020 ஆம் ஆண்டில்4.5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கூறியிருந்தது. இதையே மத்திய அரசும் தற்போது கூறியுள்ளது.மத்திய நிதியமைச்சகத்தின், பொருளாதார விவகாரங்களுக்கான துறை (Department of Economic Affairs) ஜூன் மாதத்திற்கான தனது பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில், “2020-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 4.5 சதவிகிதவீழ்ச்சியைச் சந்திக்கும் (அதாவது மைனஸ் 4.5 சதவிகிதமாகும்)” என்றசர்வதேச நாணய நிதியத்தின் தரவை மேற்கோள் காட்டி ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இது 2020 ஏப்ரல் மாதத்தில் தாங்கள் மதிப்பிட்டதைக்காட்டிலும் 6.4 சதவிகிதம் கீழ்நோக்கிய வீழ்ச்சி என்று தெரிவித்துள்ளது.“கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி இல்லாததன் காரணமாக ஏற்படும் நிச்சயமற்ற தன்மை பொருளாதாரத்திற்கு “கடுமையான சவாலை” அளிக்கிறது. உள்நாட்டு நிதிச் சந்தைகளில், பொருளாதாரத்தில் கோவிட்-19இன் தாக்கம் நாள்தோறும் ஏற்ற இறக்கத்தைஏற்படுத்துகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை வருவாய் வசூலையும்68.9 சதவிகிதம் குறைத்துள்ளது. அதோடு பணவீக்கக் கண்ணோட்டமும் தொடர்ந்து பலவீனமாக உள்ளது” என்று பிரச்சனைகளை பொருளாதார விவகாரங்களுக்கான துறை அடுக்கியுள்ளது.

;