சென்னை:
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கொரோனாவால் பிறப்பிக் கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் வெள்ளியன்று (ஜூலை 31) மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,125க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.71.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.