tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 25 இதற்கு முன்னால்

1906 - லியனார்டோ டாரஸ் கேவெடோ என்ற ஸ்பானியர், ஸ்பெயின் அரசர், ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், பில்பாவ் துறைமுகத்தின் கரையிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் கடலில் ஒரு படகை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார். ஏற்கெனவே அமெரிக்காவில் ஒரு படகை  தொலைவிலிருந்து நிக்கோலா டெஸ்லா இயக்கிக் காட்டியிருந்தார். அவரது கண்டுபிடிப்புக்குத் தொடர்பின்றி கேவெடோ உருவாக்கியிருந்த டெலிக்கினோ என்று பெயரிடப்பட்ட படகில், ரோபோவையொத்த ஓர் அமைப்பு, இவரிடமிருந்து ரேடியோ சமிக்ஞைகளைப் பெற்று, அதற்கேற்ப படகை இயக்கியது. அது மட்டுமின்றி தற்காலத்தில் பயன்படுத்தப்படும் கம்பியில்லா ரிமோட்  கண்ட்ரோல் அமைப்புகளுக்கான முக்கியத் தத்துவங்களை யும் கேவெடோ உருவாக்கினார். இந்தப் படகை மேம்படுத்தி, டார்ப்பீடோக்கள், எறிகுண்டுகள் ஆகியவற்றையும் ரிமோட் மூலம் வீசச்செய்ய முயற்சித்த கேவெடோ, போதிய நிதிவசதியின்மையால் அந்த ஆய்வுகளைக் கைவிட நேர்ந்தது. தங்கள் இருப்பிடப்பகுதியில் கேபிள் கார் போக்குவரத்தை வடிவமைத்துக் காப்புரிமை பெற்ற கேவெடோ, கேபிள் கார்களில் இருந்த பாதுகாப்புக் குறைபாடுகளையும் சரி  செய்தார். நயாகரா அருவியின் கனடியப் பகுதியில் இவர் வடிவமைத்து, 1916இல் இயங்கத் தொடங்கிய ஸ்பானிஷ் ஏரோகார் என்னும் நயாகரா நதியைக் கடப்பதற்கான கேபிள் கார் போக்குவரத்து, இன்றுவரை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வான்கப்பல் என்றழைக்கப்பட்ட வெப்பக்காற்று பலூன் மிதவைகளி லிருந்த குறைகளை நீக்கி இவர் உருவாக்கிய வான்கப்பல்  இங்கிலாந்து, பிரான்ஸ் படைகளாலும் பயன்படுத்தப் பட்டதுடன், முதல் உலகப்போரில் பல முக்கியப் பணி களுக்கும் பயன்படுத்தப்பட்டது. எந்திரக் கரங்கள் மூலம், மனித இடையீடு இன்றியே நகர்த்தல்களைச் செய்யும் வகையில் கேவெடோ உருவாக்கிய தானியங்கி செஸ்  விளையாட்டுக் கருவி உலகின் முதல் கணினி விளை யாட்டுக் கருவி என்று அழைக்கப்பெறும் தகுதியைப் பெற்றிருந்தது. மின் எந்திரவியல் பாகங்களைக்கொண்டு சார்லஸ் பாப்பேஜ் உருவாக்க முயற்சித்ததைப்போன்று, வெறும் பற்சக்கரங்களின் இயக்கங்களின்மூலம் கணக்கிடும் ஒரு கருவியையும் கேவெடோ உருவாக்கி னார். உள்ளிடுவதற்கும், விடைகளை அச்சிடுவதற்கும் ஒரு தட்டச்சு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த இது, முழுமையாகச் செயல்படும் கணக்கிடும் எந்திரமாக  இருந்தது. அவரது ‘தானியங்கிகள் பற்றிய கட்டுரைகள்’ போன்றவற்றின் முக்கியத்துவம் அன்று உணரப்பட வில்லை என்று வரலாற்றாசிரியர் ராண்டெல் குறிப்பிடு கிறார். மிகத் தாமதமாக அவரது மதிப்பு உணரப்பட்டு, 2007இல் மின் பொறியியல், கணிதம் ஆகியவற்றின் மைல்கல் என்ற சிறப்பு அவருக்கு வழங்கப்பட்டது.