tamilnadu

img

அசாஞ்சேவுக்கு உடனடியாக சிகிச்சை தேவை - 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கடிதம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும், விக்கிலீக்ஸ் நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்கா கைது செய்ய தீவிரம் காட்டியது. இதற்கிடையே அவர் மீது ஸ்வீடன் அரசு பாலியல் வழக்கு சுமத்தியது.  இதை அடுத்து, 9 ஆண்டுகள் ஈக்வடார் தூதரகத்திலேயே அசாஞ்சே தஞ்சம் அடைந்திருந்தார். அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை திடீரென ஈக்வடார் அரசு வாபஸ் பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் போலீஸார் அவரை  கைது செய்து, தனிமை சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில், அசாஞ்சேவுக்கு  உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை பரிசோதித்த 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல் பிரச்சினைகள் மற்றும் கடுமையான தோள்பட்டை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதம் உள்துறை செயலாளர் ப்ரிதி படேலுக்கு அனுப்பப்பட்டது.
 

;