tamilnadu

img

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய ரூபிக் கியூப்களை உருவாக்கி சாதனை படைத்த நபர்

இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய ரூபிக் கியூப்களை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் கடந்த 1974-aaம் ஆண்டில் கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார். இந்த 6 நிறங்களை கொண்ட கனசதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் கியூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் இப்ஸ்விட்ச் பகுதியைச் சேர்ந்த டோனி பிஷ்செர்  6 அடி 8 அங்குல உயரத்தில் மிகப்பெரிய ரூபிக் கியூபை உருவாக்கி தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்பு 5 அடி 1.7 அங்குலம் உயரத்தில் ரூபிக் கியூபை உருவாக்கி இவர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி, உலகிலேயே 0.22 அங்குலம் அளவிலான மிகச்சிறிய ரூபிக் கியூபை உருவாக்கி இவர் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.