tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா, ஜூலை 14 - இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில்  (உள்நாட்டு நேரப்படி) ஞாயிற ன்று மாலை சுமார் 6.30 மணி யளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத் தால் கட்டிடங்கள் குலுங்கின.  மாலுக்கு மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள டெர்னே ட்டே என்ற நகருக்கு  தென்மேற் கில் சுமார் 165 கிலோ மீட்டர்  தூரத்தில் பூமியின் அடியில் 10  கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3அலகுகளாக பதிவா னது. நிலநடுக்கத்தால் வீடு, கடை கள் உள்ளிட்ட கட்டிடங்கள் மிக வேகமாக குலுங்கியதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ள னர். சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் ஞாயிறன்று காலை சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள் ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.