tamilnadu

img

சானிடைசரை மதுவுடன் கலந்து குடித்த 10 பேர் பலி

ஆந்திராவில் சானிடைசரை மதுவுடன் கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில்  கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்  20க்கும் மேற்பட்டோர் அதிக போதைக்காக தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை மதுவுடன் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த புதனன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்  இன்று காலை 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.