tamilnadu

img

மாலத்தீவில் அவசரநிலை

மாலே,மார்ச் 13- கொரோனா பாதிப்பு காரண மாக மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை  அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார். தெற்காசிய தீவு நாடான மாலத்தீவில் உள்ள சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 7 ஆம் தேதி யன்று கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர்  மூலமாக இந்த வைரஸ் பரவிய தாக கூறப்படுகிறது. இதனை யடுத்து மாலத்தீவில் உள்ள பெரும் பாலான சொகுசு விடுதிகள் மூடப் பட்டன. அங்கு இதுவரை 8 பேரு க்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை யடுத்து நோய் தடுப்பு நடவடிக்கை களை அரசு முடுக்கிவிட்டுள்ளது.