tamilnadu

img

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கே  வாக்கு விழும் - பாஜக எம்எல்ஏ ஒப்புதல் வாக்குமூலம் 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கே வாக்கு விழும் என்ற பாஜக எம்எல்ஏ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அரியானாவில் பாஜக  எம்எல்ஏ பக்ஷிஷ் சிங் விர்க் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நான் மிக நேர்மையான மனிதன் என்று ஒரு டுவிட் செய்துள்ளார்.  தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் அதில் ராகுல் இணைத்துள்ளார்.
அந்த வீடியோவில் பக்ஷிஷ் சிங், ஏராளமான பாஜக தொண்டர்கள் நிறைந்த அரங்கில் பேசும் போது, எந்த பொத்தானை அழுத்துகிறார்கள் என்பது முக்கியமே அல்ல, வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பாஜகவிற்கே வாக்குகள் விழும் என்று பேசுகிறார். 39 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், விர்க் பஞ்சாபி மொழியில் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.