tamilnadu

தஞ்சாவூர் மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

 மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர், ஆக.25- திருவோணம் ஒன்றியம்  தளிகைவிடுதியில் ஆர்.சுதா  தலைமையில் தமிழ்நாடு  அனைத்து வகை மாற்று த்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை  அமைப்பு கூட்டம் திங்க ள்கிழமை நடைபெற்றது. இதில் அமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், ஒரத்தநாடு ஒன்றியப் பொறுப்பாளர் கஸ்தூரி பேசினர். கிளைத் தலைவராக ஆர்.சுதா, துணைத் தலைவராக ஆர்.ரம்யா, செயலாளராக ஆர்.ராஜேஸ்வரி, துணைச் செய லாளராக எம்.புஷ்பராஜ், பொருளாளராக ஆர்ஆனந்தி ஆகியோர் தேர்ந்தெடு க்கப்பட்டனர். புதிய நிர்வா கிகளை அறிமுகப்படுத்தி அமைப்பின் மாவட்டசெய லாளர் பி.எம்.இளங்கோவன் பேசினார்.

எம்.ஜி.ஆர் அரசு கலை கல்லூரியில் ஆக.28 முதல் செப்.4 வரை மாணவர் சேர்க்கை

குடவாசல், ஆக.25- குடவாசல் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 2020-2021 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆக.28 முதல் செப்டம்பர் 4 வரை  நடைபெறும் என கல்லூரி முதல்வர் து.ராஜேந்திரன் தெரி வித்துள்ளார். அரசு உத்தரவின்படி இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தர வரிசை அடிப்படையில் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அழைப்பேசி வாயிலாக சேர்க்கை விவரம் அனுப் பப்பட்டது. இந்த வகையில் கல்லூரி முதல்வர் முனைவர் து.ராஜேந்தி ரன் தலைமையில் ஆக.28 துவங்கி செப்டம்பர் 4 வரை தமிழக  அரசின் நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் தர வரிசை  அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக அழைக்கப்பட்ட மாணவர்கள் மட்டும்  தவறாமல் கல்லூரி வந்து, பாடப்பிரிவு அடிப்படையில் கல்லூ ரியில் சேர்ந்து கொள்ள வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு மாணவர்கள் மட்டும், முகக் கவசம்  அணிந்து வர வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  உதவியாளர்களாக ஒருவர் வரலாம் என செய்திக் குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள்

அரியலூர், ஆக.25- அரியலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் வாழை  மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் ஏற்படும் சேதாரங்க ளுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் தோட்டக்கலை துறை  மூலம் பயிர் காப்பீடு செய்ய இலக்கு பெறப்பட்டு செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வாழை மற்றும் மரவ ள்ளிக்கிழங்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு  முறையே ரூ.3175 மற்றும் ரூ.1,457 என பிரீமியமாக செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31கடைசி நாளா கும். பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும், கடன்பெ றாத விவசாயிகள் அரசின் பொது இ-சேவை மையங்களிலும்  ஆன்லைன் மூலம் பிரீமிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.

;