tamilnadu

img

புதுக்கோட்டை மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு

அறந்தாங்கி
தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு சனியன்று வழக்கம் போல மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதியிலிருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 96 விசைப்படகுகளில் இந்தியக் கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் புதுக்கோட்டை மீனவர்கள் குரூப்பை சுற்றி வளைத்து. 

பெரும்பாலான மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுடன் சாமர்த்தியமாகத்  தப்பித்தாலும் பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு இலங்கை கடற்படையிடம் சிக்கியது. படகிலிருந்த பாரதி, அசோகன், சக்தி குமார், மணி ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். கைது செய்தது மட்டுமில்லாமல் படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களைப் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை தனது அட்டூழியத்தை மீண்டும் தொடர்கிறது.

;