tamilnadu

img

தோழர் கோ.வீரய்யன் நினைவு தினம்

தரங்கம்பாடி, நவ.19- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் கோ.வீரய்யன் நினைவு தினம் திங்களன்று நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அனு சரிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் முன்பு  அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்தி ற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின், கட்சியின் வட்டச் செயலாளர் சி.மேகநா தன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் அறிவழன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் 
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றி யத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க அலு வலகத்தில் சங்க மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் தலைமையில் கோ.வீரய்யன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடை பெற்றது.  சங்க ஒன்றிய செயலாளர் எ.தங்கராசு, பொருளாளர் டி.செல்வராஜ், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் டி.ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலா ளர் எஸ். குருநாதன், வசந்தா கணேசன் உள்ளிட்டோர் வீர வணக்கம் செலுத்தினர்.