ஜெயங்கொண்டத்தில்டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
அரியலூர், நவ.14- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு வழிச் சாலையில் நீதிமன்ற உத்தர வை மீறி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. மீறி திறந்தால் விவசாய சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொண்டு நிறுவனங்கள் அனைவரையும் திரட்டி போ ராட்டம் நடத்தப்படும். எனவே அப்பகுதி யில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே. மகாராஜன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரணி பார்க் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி
கரூர், நவ.14- பரணி பார்க் கல்வி குழும நிறுவன அறங்காவலர் ஆர்.சாமியப்பர் நினைவாக 10 நாள் நடைபெறும் பரணி அறிவியல் திரு விழாவின் ஒன்பதாவது நாளான அன்று பரணி பார்க் கல்வி குழும ‘மாணவர்கள் தொல்லியல் சங்கத்தின்’ சார்பாக ‘கீழடி அகழ்வாராய்ச்சி சிறப்பு கண்காட்சி’யும், மேலும் பரணி பார்க் குழந்தைகள் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர் கவிதா கலந்து கொண்டார். பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர்ப த்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் முனை வர். சொ.ராமசுப்பிரமணியன், அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தனர். பிரி.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறிய குழந்தைகள் எளிய அறிவி யல் தத்துவங்களை விளக்கும் விதமாக கண்காட்சியில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் கீழடி தொடர்பான தமிழரின் சங்க கால நாகரிகத்தை விளக்கும் ‘கீழடி! தமிழரின் மேன்மைமிகு நகர நாகரீகம்” என்ற தலைப்பிலான அகழ்வாராய்ச்சி கண்கா ட்சியை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு பயன்பெற்றனர். ‘பரணி தொல்லியல் சங்க’ மாணவ தொண்டர்கள், தங்கள் சக மாண வர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்க ளை தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதித் தந்ததை அனைவரும் வியந்து பாராட்டினர். 2500 ஆண்டுகால பழமை வாய்ந்த ‘தமிழி’ எழுத்து வடிவத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டதை கண்டு அனைவரும் அகமகிழ்ந்தனர். கீழடி அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி ஏற்பாடுகளை பரணிபார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராம சுப்பிரமணியன் தலைமையில் பரணி பார்க் முதல்வர் சேகர், துணை முதல்வர்கள் முத்துக்குமரன், நவீன் குமார், மகாலட்சுமி, கௌசல்யா மற்றும் ரேணுகாதேவி செய்தி ருந்தனர். பரணி வித்யாலயா முதல்வர் சுதா தேவி, எம்.குமாரசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, ‘தமிழி’ பயிற்றுனர் புவ னேஸ்வரிதேவி மற்றும் ஏராளமான பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.