tamilnadu

img

தோழர் றசல்ராஜ் 8-ஆவது நினைவு தினம்...

அருமனை:
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சிமுன்னாள் அருமனை வட்டாரக்குழு உறுப்பினருமான றசல் ராஜ்8ஆம் ஆண்டு நினைவு தினம்திங்களன்று (அக்.26) பாகோட்டில் நடைபெற்றது.அன்னாரது நினைவு ஸ்தூபியில் கொடியேற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சிங்காரன், மேல்புறம் வட்டாரச் செயலாளர் ஆர்.ஜெயராஜ், அருமனை வட்டாரச்செயலாளர் சி.சசிகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், மூத்த தோழர் தங்கப்பன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.