tamilnadu

தூத்தூர் போலீஸ் மீது 3 பேர் தாக்குதல்

அரியலூர், ஜூலை 5- அரியலூர் மாவட்டம்  திருமானூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட தூத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு போ லீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மணி வண்ணன்(54). இவர் சனிக்கி ழமை மாலை காவல் நிலை யத்தில் பணியை முடித்து விட்டு தனது சொந்த ஊரான தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்திற்கு பை க்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முத்து வாஞ்சேரி வடக்குதெரு சாலையில், தனது பைக்கை நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வ ழியாக பைக்கில் வந்த தூ த்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(34), சதீஸ்(31), ராம்கி(30) ஆகிய மூன்று பேரும் மணிவண்ணனை தாக்கியுள்ளனர்.  இதில்  காயமடைந்த மணிவ ண்ணனை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணி வண்ணன் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போ லீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர த்குமார் வழக்கு பதிந்து,  சதீஸ்-ஐ கைது செய்துள்ளார். மற்ற இரண்டு பேரையும் போ லீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்த விசார ணையில், மளிகைக்கடை ஒன்றில் நடந்த தகராறில் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சந்திரசேக ரின் தாயாரை போலீசார் குற்றவாளியாக சேர்த்து ள்ளனர். இதனால் சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மீது கோபம் கொண்ட சந்திரசேகர் மற்றும் அவ ரது நண்பர்களான சதீஸ், ராம்கி ஆகியோரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மணி வண்ணனை தாக்கியுள்ளனர் என தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.