tamilnadu

img

இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

அமெரிக்காவில் நெற்றியில் வால் உடைய நாய்க்குட்டியின் புகைப்படம் ’யூனிகார்ன் பப்பி’  என இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில், நெற்றியில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது. மீட்கப்பட்ட  நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்ததில், அந்த வால் நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரியவந்தது. வாலை மேலும் கீழும் அசைக்க இயலாது என்றும், இந்த வால் இருப்பதால் அந்த நாய்க்குட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நாய்க்குட்டி ’யூனிகார்ன் பப்பி’ என இணையத்தில் வைரலாகி வருகிறது.