tamilnadu

img

ஆஸ்திரேலியா காட்டுத்தீயின் புகை உலகம் முழுவதும் பரவும் - நாசா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் புகை உலகம் முழுவதும் பரவும் என்று நாசா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீ சில இடங்களில், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீயால் உருவான புகை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், இரத்த நிறத்தில் வானத்தை மாற்ற செய்தது.இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று இந்த புகையானது தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரவியது என்றும், அதேபோல் ஜனவரி 8-ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் இந்த புகை பரவி விட்டது என்றும், இந்த புகை குறைந்தது ஒரு முறையாவது உலகம் முழுவதும் சுற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு அதிகமாக புகைகள் பயணிக்க முடியும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த புகையின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம், இதனால் காலநிலை அதிக வெப்பம் அல்லது அதிக குளிருக்கு தள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா மற்றும் அடிலெய்ட் ஆகிய பகுதிகளில் ஆபத்தான காற்று சூழ்ந்துள்ளது. மெல்போர்ன் நகரில் இன்று பரவி உள்ள மோசமான காற்று பயத்தை உருவாக்கியுள்ளதாகவும், மக்கள் உடல்நிலையை பாதிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிந்து கொண்டுள்ள நிலையில், காலநிலை உகந்ததாக உள்ளதால் தீயணைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
 

;