அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையின் போதே திருமணம் நடந்துள்ள சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கார்லேஸ் முனிஸ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலை தொடர்ந்து மேசமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையறித்த காதலி கிரேஸ் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே கார்ஸ் முனிஸ்சை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில நாட்கள் கழித்து கார்லேஸ் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.