tamilnadu

img

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியது!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

உலகிம் முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193,186 ஆக உள்ளது, பலியானவர்களின் எண்ணிக்கை 7,865 ஆக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000க்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நியூயார்க் மற்றும் மேற்கு பகுதியில் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களின் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. பயண கட்டுப்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், நியூ ஜெர்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.