tamilnadu

img

கிணற்றில் சாக்கடை நீர் கலப்பு- பொதுமக்கள் எதிர்ப்பு

அன்னூர், டிச. 14- அன்னூர் அருகே நாகம்மாபுதூர் கோயில் கிணற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம், நாகம்மா புதூர், ஆனந்தா தியேட்டர் திரையரங்கு பின்புறமாக இந்து சமய அறநிலைதுறைக்கு  சொந்தமான  சுமார் 2 ஏக்கர் கோவில் நிலம் உள்ளது. இந்நி லத்தின் ஒருபகுதியில் கிணறு ஒன்றும் அமைந் துள்ளது. இந்நிலையில் அருகிலுள்ள குடியி ருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக் கடை நீரானது இங்குள்ள கோயில் கிணற் றில் விடப்பட்டு வருகிறது. இதனால் அப்பகு தியில் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிணற்றை சுற்றி புதர்கள் மண்டி பாம்புகள், பெருச்சாளிகள், விச பூச்சிகள் உருவாகி அப்ப குதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வரு கிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு  பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து ஐந்துக் கும் மேற்பட்ட பாம்புகளை அப்பகுதி யினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட னர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளா கிள்ளனர். மேலும், இங்கு கழிவுநீர் தேங்கி யிருப்பதால் பல்வேறு நோய் தொற்று களுக்கு அப்பகுதியினர் ஆளாகி வருகின்ற னர். எனவே, கிணற்றுக்குள் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நிறுத்துவடன், அப் பகுதி முழுவதும் உடனடியாக சுகாதார நடவ டிக்கைகளை மேற்கொள்ளள வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல  முறை முறையிட்டும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என அப்பகு தியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின் றனர். இதேபோல், அன்னூர் பேரூராட்சிக்குட் பட்ட இரண்டாவது வார்டு இந்திராநகர் பகுதி யில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கப் பட்டது. ஆனால், நிதிப்பற்றாக்குறை காரண மாக ஒரு பகுதி அளவிற்கு மட்டும் பாதாள சாக்கடை கட்டப்பட்டு பின்னர் கைவிடப்பட் டது. இதனால் சாக்கடை நீர் வெளியேற வழி யின்றி அப்பகுதியிலேயே தேங்கிய நிற்கிறது. இதன்காரணமாக அப்பகுதியிலுள்ள டி காலனி மக்கள் நோய் தொற்றுகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். ஆகவே, இந்த பாதாள சாக்கடை பணிகளை மீண்டும் உடனடியாக துவங்கி விரைந்து முடித்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனனர்.

;