tamilnadu

img

காவல் நிலையத்திலேயே மதுபானம் விற்றுவந்த குஜராத் போலீசார்!

அகமதாபாத்:
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில்உள்ளது காடி காவல் நிலையம். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக, போலீசாரே மதுபானவிற்பனை செய்து வந்தது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அண்மையில் சபர்மதி கால்வாயில் மதுபாட்டில்கள் கொட்டப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில், இந்தஉண்மை தெரியவந்துள்ளது.சோதனைச் சாவடிகள் மூலம், மதுபானங்களை பறிமுதல் செய்த காடி காவல்நிலையபோலீசார், அவற்றை காவல்நிலையத்தில் வைத்தே விற்பனை செய்துள்ளனர்.காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஓ.எம்.தேசாய், இரண்டு காவல் துணை ஆய்வாளர்கள், 4 காவலர்கள், குஜராத் ரக்சா தல்அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு வீட்டுக்காவலர் ஆகியோர் கூட்டாக இந்த செயல் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்த சட்டவிரோத வணிகம் எந்தளவிற்கு நடைபெற்றது; இதனால் அதிகம் பலன்பெற்றோர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

;