tamilnadu

img

திருவில்லிபுத்தூரில் 300 குடும்பங்களுக்கு சிபிஎம் உணவு வழங்கியது   

திருவில்லிபுத்தூரில் பெருமல் சேரி பகுதியில் உள்ள 300 குடும்பங்களுக்கு   வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒருவேளை உணவு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராஜீவின்  ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு கட்சி கிளை செயலாளர் தங்கக்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.