கும்பகோணம் நவ.29- தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றி யத்தில் விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் வி.முரளிதரன் தலைமை ஏற்றார். ஒன்றிய தலைவர் சதாசிவம், ஒன்றிய துணைத் தலைவர் சீனிவாசன், பொரு ளாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பி.செந் தில்குமார், துணைச் செயலாளர் பி.எம் காதர்உசேன் மாவட்டக்குழு ஆர். கஸ்தூரிபாய் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர் கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாபநாசம் ஒன்றியத்தில் விவசாயிக ளுக்கு யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018 -19 ஆண்டில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகை உரிய முறையில் வழங்கிட வேண்டும். கூட்டு றவு சங்கங்களில் அனைத்து விவசாயிக ளின் பயிர் காப்பீடு தொகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதைதொடர்ந்து பாபநாசம் துணை வட்டாட்சியர் கலைச்செல்வி, விவசாயி களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் விரை வில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஆயிரக்கணக்கான விவசாயி களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.