விழுப்புரம், மே 30- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்க ளின் சார்பில் சனிக்கிழமையன்று (மே 30) பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொரோனா காலத்தில் அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி உத்தரவு பிறப்பித்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சுற்ற றிக்கையை வாபஸ் பெற வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது போல் சிறப்பு ஊதி யம் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தொழி லாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பிரகாஷ், மண்டலப் பொருளாளர் முரளி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி, சி.பி.எம். வட்டாரச் செயலாளர் சிவராமன் நிர்வாகிகள் ஏழுமலை, முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.