விருதுநகர், மே 12- கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடு பட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளனர். இந் நிலையில், பாதிக்கப்பட்ட குடும் பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் துப்புரவுத் தொழிலா ளர்களுக்கு தரமான கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட பொருட் களை வழங்கிடக் கோரி விருது நகர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கம் -சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போரா ட்டத்திற்கு பாக்கியம், விஜய குமார் ஆகியோர் தலைமை யேற்றனர். துவக்கி வைத்து சிபிஎம் நகர் செயலாளர் எல்.முரு கன் பேசினார். முடிவில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். அருப்புக்கோட்டை நகராட்சி முன்பு கிளைச் செயலாளர் கணே சன், முனியசாமி ஆகியோர் தலை மையேற்றனர். துவக்கி வைத்து சிஐடியு கன்வீனர் ராஜா பேசினார். முடிவில் சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து கண்டன உரை யாற்றினார். சிவகாசியில் கிளைச் செயலா ளர் சங்கர், கருப்பசாமி, மூர்த்தி ஆகியோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து சிஐடியு தலை வர் பி.பால்ராஜா பேசினார். முடி வில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.என்.ஜோதிமணி கண்டன உரையாற்றினார். இதில் ஏராள மானோர் பங்கேற்றனர்.