tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆரம்பம்

திருப்பூர், செப். 26 – பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு 9 மாத காலமாக சம்பளம் தரப்படாததைக் கண் டித்து வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். தமிழகத்தில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 9 மாதங்க ளாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத் தப்பட்டன. எனினும் இதுவரை நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலை யில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி முடிய மூன்று நாட் கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர். இதன்படி கோவை மாவட் டத்தில் கோவை, திருப்பூர், உடு மலை, பல்லடம் உள்பட அனைத்து பகுதிகளிலும் தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் 450க்கும் மேற்பட் டோர் முழுமையாக வேலைநிறுத் தப் போராட்டத்தை வியாழனன்று தொடங்கினர். இந்த போராட் டத்தில் தொலைத் தொடர்பு பழுது நீக்கம் உள்ளிட்ட களப்பணியாற் றும் ஊழியர்கள் முதற்கொண்டு  அலுவலக காவலாளி உள்பட  ஒப்பந்த ஊழியர்கள் முழுமையாக வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூர், பல்ல டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. திருப்பூரில் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக கிளைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகி கள் உதவிச் செயலாளர் முத்துக் குமார், மாநில செயற்குழு உறுப் பினர் ரமேஷ் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், கிளைத் தலைவர் வாலீ சன், கிளைச் செயலாளர் குமர வேல்  ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். அதேபோல் பல்லடத்தில் தொலைபேசி அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் ரகு தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கல்யாணராமன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் எம்.காந்தி, கிளைச் செயலாளர் நாகராஜன், ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைச் செய லாளர் ஆறுமுகம் ஆகியோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். போராட்டத்தின் இரண்டாம் நாளான வெள்ளியன்று மாலை யும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.