உளுந்தூர்பேட்டை, ஜூலை 30- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன் குஞ்சரம் கிராமத்தில் வசிப்பவர்கள் கேச வன். இவர் வெளிநாட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி மற்றும் மகன்கள் சரத்குமார் (20), சிவக்குமார் (15), மகள் சவுந்தர்யா (18) ஆகியோருடன் அயன் அயன்குஞ்சரத்தில் வசித்து வந்தார். இதில் சிவக்குமார் எலவனாசூர் கோட்டை யில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) அன்று மதி யம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவக் குமார் இரவு வரை வீடு திரும்பாததால் தாய் மற்றும் உறவினர்கள் மாணவர்களை தேடி னர். இரவு சுமார் 11 மணியளவில் அருகில் உள்ள காப்புக்காடு பகுதியில் பாறை களுக்கிடையே புதரில் சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந் ததை பார்த்துள்ளனர். தகவலறிந்த எடைக்கல் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல்துறை யினர் காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமை யில் விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேக ரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தபடி சிவக்குமாரின் வீட்டின் முன்பு வரை சென்று நின்று விட்டது. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசா ரணை நடத்தினார். சிவக்குமாரின் தாய், அண்ணன் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையே செவ்வாய்க்கிழமையன்று முண்டி யம்பாக்கம் மருத்துவமனையில் சிவக்குமா ரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.